உள்ளூர் செய்திகள்

காளப்பட்டி ஸ்ரீ பிரிய கணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-09 09:02 GMT   |   Update On 2023-06-09 09:02 GMT
  • கும்பாபிேஷக விழா கடந்த 5-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.
  • சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி புதன்கிழமை நடைபெற்றது.

கோவை,

கோவை மாவட்டம் வடக்கு தாலுகா, காளப்பட்டி பி.எஸ்.ஜி லே அவுட்டில் உள்ள ஸ்ரீ பிரிய கணபதி கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிேஷக விழா கடந்த 5-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் யாக பூஜை நடத்தப்பட்டது.

சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, ஸ்ரீ பிரிய கணபதி விமான கோபுரத்திற்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. சர்வ சாதகம் சிவாகம செம்மல் சிவஸ்ரீ எஸ் எஸ் செந்தில்நாத சிவாச்சாரியார் மற்றும் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஸ்தானிகர் சிவாகம பாஸ்கரா சிவஸ்ரீ எஸ் சிவகுரு சிவம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதில் பி.எஸ்.ஜி லே-அவுட், நரேன் கார்டன் அண்டு எக்ஸ்டென்சன், விஎல்கே கார்டன் அண்டு எக்ஸ்டன்சன், ஸ்ரீநகர், ஸ்ரீராம் கார்டன், பாலசுப்ரமணியன் அவென்யூ, ஐயப்பா நகர், சார்ப் நகர் மற்றும் காளப்பட்டி பகுதியை சார்ந்தவர்கள் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News