உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி
- கருப்பன் அதே ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- கரும்பு லோடு ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கருப்பன் மீது மோதியது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கருப்பன் (வயது 68) தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கரும்பு லோடு ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கருப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக டிராக்டர் டிரைவரான புதுப்பட்டையை சேர்ந்த வேலு என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.