உள்ளூர் செய்திகள்
மாடியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி பலி
- கொடைக்கானல் அருகே பங்களா மாடியில் சுத்தம் செய்த போது தவறி விழுந்து தொழிலாளி பலியானார்
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் கீழ்பூமி பகுதியை சேர்ந்தவர் சிவராஜன்(54). இவர் அதேபகுதியில் உள்ள தனியார் பங்களாவில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று சிவராஜன் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றபோது படியில் இருந்து தவறிவிழுந்தார்.
உடனடியாக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.