உள்ளூர் செய்திகள்
தருமபுரி நகர பகுதியில் பல இடங்களில் கைவரிசை: இருசக்கர வாகனங்களை திருடிய சிறுவன் சிக்கினான்
- கடைவீதி பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
- அரியகுளத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனுக்கு இந்த திருட்டில் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைவீதி பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து இருசக்கர வாகனங்களை திருடும் நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கண்காணிப்பு காமிரா வில் பதிவான காட்சியை வைத்து தேடி வந்தனர். அப்போது அரியகுளத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனுக்கு இந்த திருட்டில் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிறுவனை தருமபுரி நகர போலீசார்
நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம்
இருந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.