- திருவாதவூரில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் பவனி நடந்தது.
- இன்று அவர் சித்தி பெற்ற நாளாகும்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற பொன்மொழிக்கேற்ப திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர். இன்று அவர் சித்தி பெற்ற நாளாகும்.
இதனை முன்னிட்டு திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் ேகாவிலில் இருந்து மாணிக்கவாசகர் சப்பரத்தில் புறப்பட்டு அருகில் உள்ள பிறந்த வீட்டிற்கு சென்று பக்தர்களுக்கு இன்று காலை அருள் பாலித்தார்.
பல்வேறு மாவட்ட ங்களில் வந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட சிவனடியார்கள் அவரது வீட்டுக்கு வந்து இருந்து திருவாசகம் படித்தனர். கோவிலின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா விற்கான ஏற்பாடுகளை மாணிக்கவாசகர் கோவில் அறங்காவலர்கள் மனோஜ் பிரபாகர், சீனிவாசன், சுசீந்திரன், முருகன், சேது மாதவன், கார்த்திகேயன் ஆகியோர் செய்து இருந்தனர்.