சிறுவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்:போலீஸ் கமிஷனர்
- ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.
- ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்களை ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரம் தெரிந்தால், உடனடியாக எனக்கு புகார் அனுப்பலாம்.
மதுரை
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாடிப்பட்டி, கட்டக்கு ளம் நாராயணன் மகன் மோகனசுந்தரம் என்பவர், 7-ம் வகுப்பு மாணவனிடம் ப்ரீ-பயர் ஆன்லைன் விளை யாட்டு ஆசை வார்த்தை கூறி கடந்த 3 மாதங்களாக வங்கி கணக்கு மூலம் 17 ஆயிரம் ரூபாயும், நேரடியாக 25 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் ரூ.42,000 ஏமாற்றி பணம் பறித்து உள்ளார். அவரை கைது செய்து உள்ளோம். பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே இணையத்தில் பழகும் சிறுவர்களை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதுபோன்ற மோசடி பேர் வழிகளிடம் ஏமாறுவதை தவிர்க்க உதவியாக இருக்கும். ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்களை ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரம் தெரிந்தால், உடனடியாக எனக்கு புகார் அனுப்பலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.