உள்ளூர் செய்திகள்

பலியான வாலிபர் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க ேகாரி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பெண்கள் மற்றும் உறவினர்கள்.

சித்திரை திருவிழா- கூட்ட நெரிசலில் சிக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

Published On 2023-05-22 09:13 GMT   |   Update On 2023-05-22 09:13 GMT
  • கூட்ட நெரிசலில் சிக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
  • முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரைபுதூரை சேர்ந்த சந்திரன் (வயது 55) என்பவர் மதுரை கலெக்டர் அலுவல கத்தில் உறவினர்களுடன் வந்து இன்று மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கணேஷ்பிரபு, சுதாகர் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கணேஷ்பிரபு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சுதாகர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

அவர் கடந்த 5-ந்தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண்பதற்காக நண்பர்களுடன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் வைகை ஆற்றில் விழுந்து இறந்து விட்டார்.

சுதாகர் எங்களை நல்லமுறையில் பாதுகாத்து பராமரித்து வந்தார். அவர் இறந்து விட்டது எங்களுக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே எங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனது மகன் இறந்ததற்கு தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News