உள்ளூர் செய்திகள்
என்ஜினீயர் வீட்டில் நகைகள் கொள்ளை
- மதுரையில் என்ஜினீயர் வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை போனது.
- திலகர் திடல் போலீசில் புகார் கொடுத்தார்.
மதுரை
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் மனோஜ் (வயது 24). பொறியியல் பட்டதாரி. மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு முதல் மாடியில் மனோஜ் குடும்பத்தினர் தூங்கினர். அப்போது மர்மநபர்கள் வீடுபுகுந்து பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டனர்.
மனோஜ் காலை எழுந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திலகர் திடல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.