உள்ளூர் செய்திகள்

சந்திர கிரகணம்

சந்திர கிரகணத்தையொட்டி கோவில் நடை அடைப்பு

Published On 2022-11-05 14:42 IST   |   Update On 2022-11-05 15:07:00 IST
  • இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • மதியம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும்.

திருமங்கலம்

திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் சந்திரகி ரகணத்தையொட்டிவருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 வரை நடைஅடைக்கப்படும்.

சந்திரகிரகணம் மாலை 2.39க்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைவதால் நடை சாற்றப்படுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அதே நேரத்தில் இந்த கோவிலில் மதியம் நடைபெறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News