ராமேசுவரம்- கன்னியாகுமரி சிறப்பு ெரயில்
- ராமேசுவரம்- கன்னியாகுமரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் 27-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நின்று செல்லும்.
மதுரை
மதுரை- ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த ரெயில்கள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் ராமேசுவரம்- கன்னியாகுமரி இடையே வருகிற 27-ந் தேதி முதல் மீண்டும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இது ராமேசுவரத்தில் இருந்து திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் இயக்கப்பட உள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் ராமநாதபுரம் (9.54 மணி) பரமக்குடி (10.19) மானாமதுரை (10.48), மதுரை (11.45), விருதுநகர் (நள்ளிரவு 12.23), நெல்லை (அதிகாலை 2.22), நாகர்கோவில் (3.32) வழியாக கன்னியாகுமரிக்கு 4.15 மணிக்கு செல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து நள்ளிரவு 10.15 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் (10.27), வள்ளியூர் (11.01), நெல்லை (11.52), விருதுநகர் (அதிகாலை 1.28), மதுரை (2.25), மானாமதுரை (3.13), ராமநாதபுரம் (3.58) வழியாக ராமேசுவரத்துக்கு அதிகாலை 5.38 மணிக்கு செல்லும். ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் ரெயில்கள் வருகிற 27-ந் தேதி முதலும், கன்னியா குமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் வருகிற 28-ந் தேதி முதலும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.