உள்ளூர் செய்திகள்
குழந்தைக்கு தாயான நிலையில் திருமணத்துக்கு மறுப்பு
- குழந்தைக்கு தாயான நிலையில் இளம்பெண் திருமணத்துக்கு மறுத்துள்ளார்.
- மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
மதுரை
மதுரை கீழச்சந்தை பேட்டையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், நான் மேல அனுப்பானடி, வீட்டு வசதிவாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தேன். அவர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அடிப்படையில், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
நான் கர்ப்பம் ஆனேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த வாலிபர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். போலீசார் இதில் தலையிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல அனுப்பானடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த செந்தில் (43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.