உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி
- மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.
- தமிழ்நாடு மாற்று திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை, தனியார் அறக்கட்டளைகள் இணைந்து நடத்தியது.
மதுரை
தமிழ்நாடு மாற்று திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை மற்றும் தனியார் அறக்கட்டளைகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில் மண்டபத்தில் நடத்தியது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களில் கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 5 பேர் தங்களின் வாழ்க்கைத் துணைகளை தேர்ந்தெடுத்தனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பூபதி, பொருளாளர் சிவகுமார், தயான் சந்த் விருது பெற்ற சர்வதேச தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர் ரஞ்சித்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தீபா ரோட்டரி சங்க தலைவர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.