உள்ளூர் செய்திகள்

குருவித்துறை கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2023-09-05 12:06 IST   |   Update On 2023-09-05 12:06:00 IST
  • சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
  • திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை கிராமத்தில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. குருஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த கோவிலில் இருநது திருடி செல்லப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளுக்கு யாக பூஜை நடந்தது.

இதைத் தொடர்ந்து சித்திர ரத வல்லப பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள மண்ட பத்தில் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக செயல் அலுவலர் பாலமுருகன், உபயதாரர்கள் முன்னிலையில் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நடந்தது.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கோவில் ஆய்வாளர் ஜெயலட்சுமி, திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News