உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே பெண்ணை தாக்கியவர் கைது
- மது போதையில் தினமும் ரேகாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன். அவரது மனைவி ரேகா (வயது 30) இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த துரைசாமி (50) என்பவர் மது போதையில் தினமும் ரேகாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ரேகாவை துரைசாமி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரேகா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.