உள்ளூர் செய்திகள்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணியிடம் ரூ.2 ஆயிரம் திருடியவர் கைது
- சேலம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
- அப்போது இவருக்கு அருகில் நின்ற நபர் ரவிச்சந்திரனின் பாக்கெட்டில் இருந்து ரூ.2 ஆயிரத்தை திருடினார்.
சேலம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள மேல் சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு அருகில் நின்ற நபர் ரவிச்சந்திரனின் பாக்கெட்டில் இருந்து ரூ.2 ஆயிரத்தை திருடினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் அருகில் உள்ள சக பயணிகளுடன் சேர்ந்து அந்த நபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அந்த நபர் காடையாம்பட்டி அடுத்த சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு ( 44 ) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.