உள்ளூர் செய்திகள்
கோம்பைபட்டியில் முத்தாலம்மன் கோவிலில் மண்டல பூஜை
- கோம்பைபட்டியில் முத்தாலம்மன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே கோம்பைபட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 48 வது மண்டல பூஜை இன்று நடைபெற்றது.
இதில் யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கோம்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கார்த்திகை சாமி, துணைத் தலைவர் ராசு, ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கோபால்பட்டி, வேம்பார்பட்டி, கணவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நிறைவாக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.