உள்ளூர் செய்திகள்

விழாவில், கிராம சேவை திட்டத்தின் இயக்குனர் முருகானந்தம் பேசிய காட்சி.

விளாங்காட்டூரில் மனவளக்கலை பயிற்சி நிறைவு விழா

Published On 2023-04-08 14:53 IST   |   Update On 2023-04-08 14:53:00 IST
  • ஆரோக்கிய வாழ்வுக்காக அவர்களுக்கு உடற்பயிற்சி, தியானம், காயகல்பம் மற்றும் அகத்தாய்வு பயிற்சிகள் தொடர்ந்து 5 மாதங்கள இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.
  • இதன் நிறைவு விழா தனியார் மண்டபத்தில் நடந்தது. விழாவில், கிராம சேவை திட்டத்தின் இயக்குனர் முருகானந்தம் கலந்துகொண்டு பேசினார்.

பள்ளிபாளையம்:

உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவைக் திட்டத்தில், பள்ளிபாளையம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து,

அங்குள்ள பொதுமக்களின் நோயற்ற, ஆரோக்கிய வாழ்வுக்காக அவர்களுக்கு உடற்பயிற்சி, தியானம், காயகல்பம் மற்றும் அகத்தாய்வு பயிற்சிகள் தொடர்ந்து 5 மாதங்கள இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.

இதன் நிறைவு விழா தனியார் மண்டபத்தில் நடந்தது. விழாவில், கிராம சேவை திட்டத்தின் இயக்குனர் முருகானந்தம் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து வாழ வேண்டும்.

இன்றைக்கு இருக்கின்ற மாதிரி நாளை இருக்காது, சூழ்நிலைகள் மாறி விடும். ஆனால் நாம் ஒரே மனநிலையில் வாழ வேண்டும்.

உடல் உறுப்புகள் சரியாக செயல்பட வேண்டும். மனதில் கவலை இல்லாமல் வாழ வேண்டும். மனம் அமைதியாக இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

இவையெல்லாம் பெற உடற்பயிற்சி, தவம் செய்ய வேண்டும். இதை தினமும் செய்தால், ஆரோக்கியம் நிலைத்திருக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மனவளக்கலையின் ஈரோடு மண்டல தலைவர் வெங்கடாசலம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளிபாளையம் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News