விவசாயிகளுக்கு நுண்நீர்ப்பாசனம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம்
- 30 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுவதுடன் செலவும் மிச்சமாகிறது.
- தொழில்நுட்பங்கள் அதன் பயன்கள் குறித்தும் மற்றும் அதன் மூலம் உரமிடுதல் தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பர–மத்திவேலூர் தாலுகா கூடச்சேரி கிராம விவசாயிகளுக்கு நுண்நீர்ப்பாசன கருவிகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
வேளாண்மை பயிர்களின் நீரின் தேவை கூடுதலாக இருப்பதாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயிகள் மாற்று வழியாக நவீன நீர் பாசனத்தை மேற்கொள்ள வேண்டும். இது 30 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுவதுடன் செலவும் மிச்சமாகிறது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் பாபு, வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த மானியங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும், மேற்கண்ட பயிற்சியின் நோக்கம் அதன் பயன்கள் குறித்தும் கருத்துக்கண்காட்சி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் கிருஷ்ணா, ரிவுலிஸ் இரிகேசன் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர் சொட்டுநீர்பாசனம் தெளிப்பு நீர்பாசனம் மற்றும் மழைத்தூவியின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்து தொழில்நுட்பங்கள் அதன் பயன்கள் குறித்தும் மற்றும் அதன் மூலம் உரமிடுதல் தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளித்தார். பயிற்சியின் போது விவசா–யிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கமளித்து பயிற்சியளித்தனர்.
இதில் பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் பூபதி, மற்றும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் நுண்நீர்பாசனக்கருவிகள் பராமரிப்பு செயல்வி ளக்கம் செய்து காண்பித்து, பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.