தேசிய நல்வாழ்வு குழுமத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பார்வை செயலியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்- கண்புரை உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை
- இ-பார்வை செயலியை கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
- நெல்லையில் 100 சுகாதார செவிலியர்களுக்கு இச்செயலி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தேசிய நல்வாழ்வு குழுமத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இ-பார்வை செயலியை நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
இ-பார்வை செயலியை எளிதான முறையில் கண்புரை இருப்பதை கண்டறியவும், கண் புரை உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் மற்றும் கண்புரையினால் பார்வை இழப்பதை தவிர்த்து பார்வையின்மை இல்லாத மாநிலத்தை உருவாக்க இச்செயலி பயன்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 100 சுகாதார செவிலியர்களுக்கு இச்செயலி குறித்து பயிற்சி அளிக்கப்ப ட்டுள்ளது. மேலும் செவிலியர்கள் கண்புரை உள்ள பொது மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் சாவித்திரி மற்றும் துறை சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.