உள்ளூர் செய்திகள்

பழைய நாடக கொட்டகையை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்- திருமண மண்டபம் அமைக்க முடிவு

Published On 2023-04-08 15:25 IST   |   Update On 2023-04-08 15:25:00 IST
  • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதியில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கு கள ஆய்வு மேற்கொண்டார்.
  • தண்ணீர் தொட்டி தெருவில் அமைந்துள்ள பழைய மலேரியா மருத்துவமனையை கள ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (8.4.2023) சென்னை பெருநகர வளர்ச்சி குழும இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் ரோட்டில் அமைந்துள்ள பழைய நாடக கொட்டகையை ஆய்வு செய்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதியில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கு கள ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்ணீர் தொட்டி தெருவில் அமைந்துள்ள பழைய மலேரியா மருத்துவமனையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதியில் புதிய டயாலிசிஸ் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடத்தினையும் மற்றும் தண்ணீர் தொட்டி தெருவில் அமைந்துள்ள பழைய மலேரியா மருத்துவமனையும் கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம். சிவகுருபிரபாகரன், சி.எம்.டி.ஏ தலைமை திட்ட அலுவலர் எஸ்.ருத்ரமூர்த்தி, ராயபுரம் மண்டல அலுவலர் ஜி.தமிழ்செல்வன், செயற்பொறியாளர் லாரன்ஸ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News