உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் அருகே கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர்கள் அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.


திருச்செந்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர்கள் அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

Published On 2022-08-13 15:23 IST   |   Update On 2022-08-13 15:36:00 IST
  • ஏழை-எளிய மக்களுக்காக ஆலந்தலை பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.48.95 மதிப்பில் 400 சதுர அடியில் 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
  • பயனாளிகள் ரூ.1.66லட்சம் கட்ட வேண்டும். பணம் கட்டியதும் அவர்கள் பெயருக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் ஏழை- எளிய மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

ஏழை-எளிய மக்களுக்காக ஆலந்தலை பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.48.95 மதிப்பில் 400 சதுர அடியில் 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.வரும் காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

75சதவீத கட்டுமான பணி முடிந்து விட்டது. மீதம் உள்ள பணிகள் முடிந்ததும் பயனாளிகளுக்கு வழங்கப்படும். பயனாளிகள் ரூ.1.66லட்சம் கட்ட வேண்டும். பணம் கட்டியதும் அவர்கள் பெயருக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.


Tags:    

Similar News