உள்ளூர் செய்திகள்

பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம்.


வாசுதேவநல்லூர் அருகே ஆண்களுக்கான மின்னொளி கபடி போட்டி

Published On 2023-01-16 13:57 IST   |   Update On 2023-01-16 13:57:00 IST
  • கபடி போட்டியை பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
  • ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 8 பரிசுகள், அதற்கான சுழற் கோப்பைகள், 60 கிலோ எடை பிரிவில் 4 பரிசுகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

சிவகிரி:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்துவழி காளியம்மன் கோவில் திடலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சூப்பர் சோனிக் கபடி குழு சார்பாக தமிழ் மாநில அளவிலான ஆண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

இதில் ஓபன் மற்றும் 60 கிலோ எடை பிரிவில் பிரசித்தி பெற்ற மாநிலம் முழுவதும் இருந்து 80 அணிகள் கலந்து கொண்டன.

கபடி போட்டியை பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள், பாரதீய ஜனதா கட்சி தென்காசி மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் கங்காதரன், சிவா, பாலகிருஷ்ணன் ராம்வேல் மற்றும் ஆத்துவழி ஊர் நாட்டாமைகள், அரசியல் கட்சி முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 8 பரிசுகள், அதற்கான சுழற் கோப்பைகள், 60 கிலோ எடை பிரிவில் 4 பரிசுகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை ஆத்துவழி சூப்பர் சோனிக் கபடி குழு நிர்வாகிகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தார்.

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சிவகிரியில் ஐந்து இடங்களிலும், விஸ்வநாதபேரி, இனாம்கோவில்பட்டி ஆகிய கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு அ.ஆனந்தன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலாளர் ஜெரோம் ராமன், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், ஓபிசி அணி துணைத்தலைவர் தங்கம், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணியன், கந்தசாமி, சிவகிரி நகர தலைவர் ஒருசொல்வாசகன், கருப்பையா, குமார், கண்ணன், ஒன்றிய துணைத்தலைவர்கள், இசக்கி முத்து, வேல்முருகன், அரிச்சந்திரன், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News