உள்ளூர் செய்திகள்
தீ விபத்தில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு
- வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கில் இருந்து மோனிகாவின் மீது தீ பற்றி கொண்டது.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி பையர்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகள் மோனிகா (வயது10). சம்பவத்தன்று வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கில் இருந்து சிறுமி மோனிகாவின் மீது தீ பற்றி கொண்டது. இதில் காயமடைந்த மோனிகாவை தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.