உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடையை திறந்து வைத்து உணவுப் பொருள் வழங்கிய எம்.எல்.ஏ.

புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார் எம்.எல்.ஏ. பாலாஜி: எடையூர் மக்கள் கோரிக்கை நிறைவேறியது

Published On 2022-11-10 16:21 IST   |   Update On 2022-11-10 16:21:00 IST
  • தனிக்கடை வேண்டும் என எடையூர் மக்கள் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜியிடம் கோரிக்கை வைத்தனர்.
  • காஞ்சி மக்கள் அங்காடியின் கீழ் இயங்கும் புதிய ரேஷன் கடையை அங்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி மக்கள் பல ஆண்டுகளாக மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம் பகுதி ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தனிக்கடை வேண்டும் என அப்பகுதி மக்கள் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜியிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், காஞ்சி மக்கள் அங்காடியின் கீழ் இயங்கும் புதிய ரேஷன் கடையை அங்கு திறக்க ஏற்பாடு செய்தது. இதையடுத்து 240 கார்டுதாரர்கள் பயன்படுத்தும் வகையில் அங்கு புதிய ரேஷன்கடையை எம்.எல்.ஏ பாலாஜி திறந்து வைத்து உணவு பொருட்கள் வழங்கினார்.

ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி நடராஜன், துணைத்தலைவர் ராஜாத்தி வெங்கடேன், வார்டு கவுன்சிலர்கள், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் இ.சி.ஆர் அன்பு, அய்யப்பன், ஊர் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News