உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்த கோரிக்கை

Published On 2022-06-14 10:37 IST   |   Update On 2022-06-14 10:37:00 IST
  • ஊத்துக்குளி வட்டார 3 ஆவது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

திருப்பூர்:

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் ஊத்துக்குளி வட்டார 3 வது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு அச்சங்கத்தின் வட்டார அமைப்பாளா் ஆா்.மணியன் தலைமை வகித்தாா்.இதில்தமிழக அரசு மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்மாா்ட் அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை வழங்குவதுடன், முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.வீடில்லாத அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News