உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்தாலம்மன்.

நத்தம் பகுதியில் 7 கிராமங்களில் நடந்த முத்தாலம்மன் கோவில் திருவிழா

Published On 2023-04-08 13:18 IST   |   Update On 2023-04-08 13:18:00 IST
  • அந்தந்த கிராமங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.
  • பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி, நடுவனூர், பண்ணு வார்பட்டி, காசம்பட்டி, கல்வேலிபட்டி, சாத்தா ம்பாடி, தேத்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இதில் அந்தந்த கிராமங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அந்தந்த கிராமங்களில் மாலையில் பக்தர்கள் புடை சூழ தீவட்டி பரி வாரங்களுடன் முத்தாலம்மன் பூஞ்சோலைக்கு சென்றது.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News