உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்

Published On 2023-09-25 14:43 IST   |   Update On 2023-09-25 14:43:00 IST
  • அம்மன் நகரில் வசிப்பவர்கள் பிரேம்கு மார் (20), முரளி தரன் (21), அஜய் (21). 3 பேரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
  • சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கிரேன் வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர்கள் பிரேம்குமார் (20), முரளிதரன் (21), அஜய் (21). 3 பேரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

கிரேன் மோதியது

நேற்று இரவு பிரேம்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வர முரளிதரன், அஜய் ஆகியோர் பின்னால் உட்கார்ந்து வந்தனர். இவர்கள் சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கிரேன் வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த 3 பேரும் பலத்த காய மடைந்த னர். இதை யடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து கிரேன் டிரைவரான குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்த குமார் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News