உள்ளூர் செய்திகள்

முத்தனூர் வருண கணபதி சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.

வளர்பிைற சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

Published On 2023-11-19 07:23 GMT   |   Update On 2023-11-19 07:23 GMT
  • வருணகணபதி கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு வருண கணபதிக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • சிறப்பு அலங்காரத்தில் வருண கணபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பரமத்தி வேலூர்:

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் வருணகணபதி கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு வருண கணபதிக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வருண கணபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வருண கணபதி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் சேமங்கி விநாயகர் கோவில், நொய்யல் விநாயகர் கோவில், குறுக்கு சாலை அண்ணா நகர் விநாயகர் கோவில், அத்திப்பாளையம் விநாயகர் கோவில், குப்பம் விநாயகர் கோவில், புன்னம் சத்திரம் விநாயகர் கோவில், உப்பு பாளையம் விநாயகர் கோவில், புன்னம் விநாயகர் கோவில், கரைப்பாளையம் விநாயகர் கோவில், தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவா பாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல், நானப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

Tags:    

Similar News