ஆரல்வாய்மொழி அருகே நெல் மூடைகள் சரிந்து விழுந்து டிரைவர் பலி
- ஆலையில் டாரஸ் லாரியில் உள்ள தார்ப்பாய் கயிறுகளை அவிழ்க்கும் போது 40 கிலோ எடையுள்ள எட்டு நெல் மூடைகள் பிரம்ம நாயகத்தின் மீது சரிந்து விழுந்தது.
- உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
ஆரல்வாய்மொழி, அக்.27-
நாகர்கோவிலை அடுத்த சுசீந்தரம் யோகீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பிரம்ம நாயகம் (வயது 54). இவர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த பாபு என்பவர் க்கு சொந்தமான டாரஸ் லாரியை ஓட்டி வருகிறார்.கடந்த மாதம் 22-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான நெல் மூட்டைகளை ஏற்றி ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் நவீன அரிசி ஆலைக்கு கொண்டு சென்றார்.
ஆலையில் டாரஸ் லாரியில் உள்ள தார்ப்பாய் கயிறுகளை அவிழ்க்கும் போது 40 கிலோ எடையுள்ள எட்டு நெல் மூடைகள் பிரம்ம நாயகத்தின் மீது சரிந்து விழுந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும் ஹரிகனேஷ் என்ற மகனும் உமாமகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நெல் மூடை கீழே விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.