உள்ளூர் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் அருகேமண் கடத்திய 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்
- தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பின்புறம் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்றது.
- நேற்று பொதுமக்கள் அங்கு சென்று மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை ஆகியவற்றை சிறைபிடித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பின்புறம் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்றது. இதையடுத்து நேற்று பொதுமக்கள் அங்கு சென்று மண் கடத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை ஆகியவற்றை சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, காரிப்பட்டி வருவாய் இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் அரசு நிலத்தில் மண்ணை வெட்டி எடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய 4 டிப்பர் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.