உள்ளூர் செய்திகள்
பாகலூர் அருகே கார் மோதி கட்டிட மேஸ்திரி சாவு
- அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கணேசன் (வயது19). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் இவர் காளேஸ்வரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாகலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.