சின்னசேலம் அருகே பேராசிரியர்- ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர்கல்யாணி .ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் பெரியசாமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நிலையில் கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கல்யாணி யுடன் அவரது தாய் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்யாணி மற்றும் அவரது மருமகன் ஆகியோர் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் வயதான கல்யாணியின் தாய் மட்டும் இருந்துள்ளார் .அப்போது கல்யாணி வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த கல்யாணியின் தாயிடம் வீட்டில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.அதற்கு அவர் வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் வந்த பிறகு வந்து பாருங்கள் என்று சொல்லி உள்ளார் பின்னர் மூதாட்டிக்கு தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவை உடைத்து 12 ஆயிரம் பணம் மற்றும்3 பவுன் தங்க நகை உள்ளிட்ட வற்றை திருடி சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று மாலை கல்யாணியின் மருமகன் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார் .
பின்னர் இதுகுறித்து சின்னசேலம் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .இதே போல் இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இரு இடங்களில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.