உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தனியார் கம்பெனியில் 1/2 டன் இரும்பு திருடிய 3 பேர் கைது

Published On 2022-07-15 14:43 IST   |   Update On 2022-07-15 14:43:00 IST
  • கடலூர் அருகே தனியார் கம்பெனியில் 1/2 டன் இரும்பு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கம்பெனி இயங்காததால் டன் கணக்கில் ஏற்கனவே இரும்பு பொருட்கள் ஏராளமானோர் திருடி சென்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே பெரியகுப்பத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு தானே புயல் தாக்கிய பிறகு கம்பெனி இயங்காததால் டன் கணக்கில் ஏற்கனவே இரும்பு பொருட்கள் ஏராளமானோர் திருடி சென்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசார் கடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியில் உள்ள இரும்பு கடையில் இரும்பு பொருட்கள் திருடி வந்து வைத்திருப்பதாக தனியார் கம்பெனி ஊழியர் கண்ணன் மற்றும் அவருடன் பணிபுரியும் சாமிநாதன் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது தனியார் கம்பெனிக்கு சொந்தமான இரும்பு பொருட்கள் 1/2 டன் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கஜா, பெரிய காரைக்காடு சேர்ந்தவர் முருகானந்தம், அணுகம்பட்டு ஈச்சங்காடு சேர்ந்தவர்கள் நடராஜன், எழிலரசன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கஜா என்பவரை தவிர்த்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News