மத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா
- அத்திப்பள்ளம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- மாணவ, மாணவியருக்கு விலையில்லா 41 மிதிவண்டிகளை வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திப்பள்ளம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா 41 மிதிவண்டிகளை வழங்கினார்.
இதில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜயலட்சுமி பெருமாள், தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் குண வசந்தரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி (வடக்கு), தேவராசன் (தெற்கு ) கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பூபதி, முன்னால் ஒன்றியக் குழு துணை தலைவர் ராமமூர்த்தி, பள்ளியின் தலைமையாசிரியர் சிவலிங்கம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சரளா வேலு, மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தா கவுரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் வனஜாமணி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் பழனி, ஆத்மா தலைவர் செந்தில்குமார், அ.தி.மு.க. பாசறை பாண்டியன், ஊராட்சி செயலர் விமலா, பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர் கோகிலா, துணைத் தலைவர் சங்கீதா மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.