உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே :வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்து மஞ்சபுத்தூர் கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் கட்ட சிலர் முடிவு செய்தனர். இதற்கான பணத்தை தயார் செய்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் சிலருடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்தார். இதில் அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (40) உட்பட 11 பேர் பணம் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் பெரியசாமி இடம் கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏழுமலை, சதீஷ்குமார் (24), கலியமூர்த்தி (28) ஆகியோர் மணிகண்டனை திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ஏழுமலை, சதீஷ்குமார், கலியமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் பெரிய சாமியை தேடி வருகின்றனர்.