நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் 21-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது
- இந்த ரெயில் நெல்லையில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
- மேட்டுப்பாளையத்தி லிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வந்தடையும்.
செங்கோட்டை:
நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் நலன் கருதி கூட்ட நெரிசலை தவிர்க்க தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் இயக்க தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
வாரம் ஒருமுறை
அதன்படி நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்(06030) வருகிற 21-ந்தேதி முதல் ஆகஸ்ட் 18-ந்தேதி வரை வியாழக்கிழமைகளில் புறப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந்திர ரெயில்(06029) ஜூலை 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தி லிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வந்தடையும்.
பெட்டிகள்
இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 ரெயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும்.