உள்ளூர் செய்திகள்

நெல்லை புறநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி புதிய நிர்வாகிகள்

Published On 2022-10-26 14:42 IST   |   Update On 2022-10-26 14:42:00 IST
  • நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
  • புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நெல்லை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாவட்ட அவைத்தலைவர்- பரமசிவன், இணைச் செயலாளர்- செல்லசித்ரா, துணைச் செயலாளர்கள் முருகேசன், இசக்கியம்மாள், மாவட்ட பொருளாளர் இசக்கியப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் குபேந்திர மணி என்ற அசையாவீரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் லாரன்ஸ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகேசன், இளைஞர் அணி செயலாளர் இர்சத்கான், மகளிர் அணி செயலாளர் பால்கனி, வக்கீல் அணி செயலாளர் புவனேஷ், தொழில்நுட்ப அணி செயலாளர் ரமேஷ், ஊடக அணி செயலாளர் ஜான்பீட்டர், விவசாய அணி செயலாளர் தங்கமணி, மாணவர் அணி செயலாளர் டெவின், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சபரீஸ், வர்த்தக பிரிவு அணிச்செயலாளர் சிவக்குமார், மீனவர் அணி செயலாளர் சரோஜ்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் தினகரன், பொதுக்குழு உறுப்பினர்கள்- ரவி என்ற பத்மநாதன், ஸ்மித் ஆன்ரூஸ், சந்தியாகு, பொன்மணி சுசிலா, பால்பாண்டி, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள், டென் சிங் சாமிதாஸ், ஸ்டீபன் முத்தையா, சாமுவேல் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

எனவே புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனை வருக்கும் நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதேபோல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், பேரூராட்சி பகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நெல்லை புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கும் புதிதாக அ.தி.மு.க. நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News