உள்ளூர் செய்திகள்

FILE

உடுமலை மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்வருகிற 23-ந்தேதி நடக்கிறது

Published On 2023-02-16 04:25 GMT   |   Update On 2023-02-16 04:25 GMT
  • ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது.
  • செயல் அலுவலா் சி.தீபா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

உடுமலை :

உடுமலை மாரியம்மன் கோவிலில் நூறாண்டுகளுக்குமேல் பயன்பாட்டில் இருந்த தேருக்கு பதிலாக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது.புதிய தேரின் வெள்ளோட்டம் தேரோடும் வீதிகளில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து வெள்ளோட்டத்தை துவக்கி வைக்க உள்ளனா்.பரம்பரை அறங்காவலா் யுஎஸ்எஸ்.ஸ்ரீதா், செயல் அலுவலா் சி.தீபா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News