உள்ளூர் செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கடலோர கிராமங்களில் புதிய மின்மாற்றிகள்- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-09-18 15:21 IST   |   Update On 2022-09-18 15:21:00 IST
  • மூன்று கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
  • எம்.எல்.ஏ. தலைமை வகித்து புதிய மின்மாற்றிகளை இயக்கிவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களான தாழந்தொண்டி, தொடுவாய், தாண்டவன்குளம் ஆகிய மூன்று கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக மின் சாதன பொருட்களும் பழுதடைந்து வந்ததால் தங்கள் பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடலோர கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தொடுவாய் உட்பட 3 கிராமங்களிலும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இதனை எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை வகித்து புதிய மின்மாற்றிகளை இயக்கிவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

விழாவில் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, சீர்காழி உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாரதி, விஸ்வநாதன், உதவி மின்பொறியாளர் சுபத்ரா, உதவி மின்பொறியாளர் முத்துக்குமார், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News