உள்ளூர் செய்திகள்

புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அமைந்துள்ள கவிஸ்வரர் ஆலயத்திலும், தருமபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

Published On 2023-01-01 15:13 IST   |   Update On 2023-01-01 15:13:00 IST
  • இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
  • பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் திரண்டு வந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.

தருமபுரி,

உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பை கோலாகலமாக கொண்டாடினர். இந்த ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாகவே போலீசார் கடுமையான விதிமுறைகளை அறிவித்திருந்தனர். அதன்படி இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.

தருமபுரி நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் நள்ளிரவு 12 மணிக்கு வெடிவெடித்து கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.பல பகுதிகளில் மது போதையில் உற்சாகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாரிடம் சிக்கி வருடத்தின் முதல் நாளே அபராத ரசீதை சோகத்துடன் பெற்று சென்றனர்.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.பின்னர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் இன்று அதிகாலை முதலே பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் திரண்டு வந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் 2022-ம் ஆண்டில் இறைவன் செய்ய நன்மைகளுக்காக,நன்றி தெரிவிக்கும் சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது..

ஆலய பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது..அதனைத்தொடர்ந்து 2023-ம் ஆண்டினை வரவேற்கும் விதமாக ஆலய பங்குத்தந்தையால் சிறப்பு திருப்பலி பூஜைகளும், ஜெப வழிபாடுகளும் நடைபெற்றது..

பின்னர், அனைத்து தரப்பட்ட மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று, இறை அருளுடன் வாழவும், நோய் நொடிகள் இன்றி அனைவரும் இன்புற்று வாழவும் சிறப்பு ஜெப வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.

புத்தாண்டை முன்னிட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் புத்தாடைகளை அணிந்து ஆலயத்திற்கு வந்திருந்தனர்.. திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக, தேவாலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News