உள்ளூர் செய்திகள்

பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை

Published On 2023-02-21 07:50 GMT   |   Update On 2023-02-21 07:50 GMT
  • இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 15 ஆண்டுகளை கடந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கக் கூடாது.
  • அந்த வகையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2007-ம் ஆண்டிற்குரிய வாக்கு பதிவு எந்திரம் 1260, கட்டுப்பாட்டு எந்திரம் 580 என மொத்தம் 1840 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.

நாமக்கல்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 15 ஆண்டுகளை கடந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கக் கூடாது. மேலும் அவற்றை பெங்களூரில் உள்ள பாரத் கவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2007-ம் ஆண்டிற்குரிய வாக்கு பதிவு எந்திரம் 1260, கட்டுப்பாட்டு எந்திரம் 580 என மொத்தம் 1840 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. இவை அனைத்தும் நகர் புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகும்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவு எண்களை சரி பார்க்கும் பணி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேலாளர் செல்வராசு மேற்பார்வையில் அந்த துறை ஊழியர்கள் பெல் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News