உள்ளூர் செய்திகள்
சப்பரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சி
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் பட்டினப்பிரவேச விழா
- களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா நடந்தது.
- முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
களக்காடு:
களக்காடு சத்தியவா கீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வின் தொடர் நிகழ்ச்சியான முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா நடந்தது.
இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து முருகப்பெருமான் விஷேச அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதன்பின் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, வான வெடிகள் ஒலிக்க திருவீதி உலா வந்தார். சப்பரம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.