உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சாணார்பட்டி அருகே அரசு பஸ் சேவை குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி

Published On 2022-09-29 13:43 IST   |   Update On 2022-09-29 13:43:00 IST
  • மொட்டையகவுண்டன்பட்டியில் கடந்த பல மாதங்களாக அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை.
  • மீண்டும் அரசு டவுன் பஸ்களை வழக்கம்போல் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபால்பட்டி அருகே மொட்டையகவுண்டன்பட்டி உள்ளது.இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் ஏராளமானோர் திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் காலையில் இருந்து மாலை வரை 5 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை.ஏதாவது ஒரே ஒரு நேரத்தில் மட்டும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கெப்பையன் என்பவர் கூறுகையில், இந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் பெரும்பாலும் உள்ளனர்.இவர்கள் வேலை நிமித்தமாகவும் விவசாயம் சம்பந்தமாகவும் திண்டுக்கல் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக இந்தப் பகுதியில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் இங்கிருந்து திண்டுக்கலுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஆட்டோவில் அதிக கட்டணம் செலுத்தி செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.

மீண்டும் அரசு டவுன் பஸ்களை வழக்கம்போல் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News