உள்ளூர் செய்திகள்

மசினகுடி ஊராட்சியில் மக்கள் நல திட்ட பணிகள்

Published On 2023-07-24 15:04 IST   |   Update On 2023-07-24 15:04:00 IST
  • நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
  • ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணி நடந்தது.

ஊட்டி,

ஊட்டி மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் பங்கேற்று நீர்தேக்க தொட்டி கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் அதேபகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையையும் திறந்து வைத்தார்.

இதேபோல் மசினகுடி அருகே இந்திரா காலனி பகுதியில் சமுதாய கூடத்தை சுற்றி ரூ.10 லட்சம் மதிப்பிலான சுவர் கட்டும் பணி, மாயார் பகுதியில் ரூ.5 லட்சத்தில் மைதானம் சீரமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News