உள்ளூர் செய்திகள்
அகரம்சீகூர் வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா
- அகரம்சீகூர் வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது
- வாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
அகரம்சீகூர்:
அகரம்சீகூர் அடுத்து வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரிையயொட்டி அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.