உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்
- கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவுபெற்றது.
- கிளை நூலகத்தில் கவியரங்கம் நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவுபெற்றது. இதையொட்டி கிளை நூலகத்தில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
புலவர் சிவலிங்கம், மகாலிங்கம், சாமிக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவளர் கௌரிசங்கர், நடராஜன், ஆசிரியர் பழனி சிறப்புரையாற்றினர். அறிவின் திறவுகோல் நூலகமே என்னும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு பாவலர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் இளங்கோ கவியரங்கத்தைத் தொடங்கி வைத்தார். நூலகர் சரவணன் வரவேற்றார். முடிவில் புலவர் நெடுமிடல் நன்றி கூறினார்.