உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2023-10-04 14:37 IST   |   Update On 2023-10-04 14:37:00 IST
  • பரிசளிப்பு விழாவுக்கு நகர வாணியா் சமுதாயம் கல்வி நிதி தலைவா் குமரேசன் தலைமை தாங்கினார்.
  • விழாவில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டையில் நகர வாணியா் சமுதாயம் சார்பில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான 25-ம் ஆண்டு கல்வி நிதி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. நகர வாணியா் சமுதாயம் கல்வி நிதி தலைவா் குமரேசன் தலைமை தாங்கினார். சமுதாய தலைவா்கள் மாரியப்பன், மோகன்ராஜ், முருகன், சுடலையாண்டி, துரைராஜ், லெட்சுமியம்மாள், நாராயணன், முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

நகர வாணியா் சமுதாய (கல்வி நிதி) துணைத்தலைவா் ராமகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளா் முருகன் வரவு-செலவு கணக்கு வாசித்தார். கல்வி நிதி செயலாளா் செண்பக குற்றாலம் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து சுப்பையா, ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வா் மீனாட்சிசுந்தரம், நகர வாணியா் சமுதாய துணைச்செயலாளா் திருமலை, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் செந்தில்ஆறுமுகம், குருசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமுதாய நிர்வாகிகள், விழா கமிட்டியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர வாணியா் கல்வி நிதி துணைச்செயலாளா் கருப்பசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News