உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
- வாகன சோதனையில் ஈடுபட்டனர்
- புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே நாகுடி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நாகுடி பகுதியை சேர்ந்த பரோஷ்கானின்(வயது 38) மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.35 ஆயிரத்து 910 மதிப்புள்ள புகையிலை பொருட்களை நாகுடி போலீசார் பறிமுதல் செய்து, பரோஷ்கானை கைது செய்தனர்.