உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர்க் கடன்

Published On 2023-10-07 13:39 IST   |   Update On 2023-10-07 13:39:00 IST
  • உழவர் கடன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
  • வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையால் சிறப்பு முகாம் நாடு முழுவதும் 01-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசா யிகள் இம்முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயி கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாகத் தவணை மாறாமல் திரும்பச் செலுத்தினால் 3% வரை வட்டி மானியம் பெறலாம். உழவர் கடன் அட்டைத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 இலட்சம் வரை எவ்விதப் பிணையமும் இன்றிக் கடன் வழங்கப்படும்.உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் (பட்டா/சிட்டா, அடங்கல்) ஆதார் அட்டை (கட்டாயம்), பான் அட்டை இவற்றுடன் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கிக் கிளைகளிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News