உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டம்

Published On 2022-09-02 13:56 IST   |   Update On 2022-09-02 13:56:00 IST
  • விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டம் நடைபெற்றது.
  • டார்ச் லைட் அடித்து நடத்தினர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 

கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு சார்பில், மத்திய அரசின் மின் மசோதாவை கண்டித்தும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி படி நெல் குவிண்டாலுக்கு 4000 ரூபாய் வழங்க கோரியும் டார்ச் லைட் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் பவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தேசியக் குழு உறுப்பினர் மு மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர் தமிழ்மாறன், ஒன்றிய குழு உறுப்பினர் மாசிலாமணி, அசோகன், கண்ணன், கலைமணி உள்ளிட்ட நகர குழு பங்கேற்போடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News